
தமிழக மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1500 ஆக அதிகரிக்க வாய்ப்பு! வெளியான மகிழ்ச்சி தகவல் – TN Urimai Togai Amount Increase Chance 2024
TN Urimai Togai Amount Increase Chance 2024

தமிழக பட்ஜெட் 2024:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே தமிழக அரசு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாளை 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற இருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1500ஆக அதிகரிக்க வாய்ப்பு:
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, தற்போது தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் நிலையில் இந்த உரிமை தொகையை ரூபாய் 1500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய