தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்!

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்!

தமிழக மின்வாரியத்தில் காலி பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளது.

tneb-tangedco-recruitment

tneb-tangedco-recruitment

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தனது பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலமாகவும் களப்பணியாளர்களை நேர்காணல் மூலமாகவும் நியமித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டின் படி தமிழக மின்வாரியத்தில் ஒரு 1,444,000 பணியிடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது 78 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2.5 கோடியாக இருந்த மின் இணைப்புகள் தற்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளது.

மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக அரசு ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது. ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வயர் மேன், லைன் மேன், உதவியாளருக்கான எழுவது சதவீதம் பணியிடங்கள் அதாவது 60 ஆயிரம் பணியிடங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது.

 

இதனால் தமிழக அரசு விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்களை ஆண்டுக்கு 20 சதவீதம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசு இவர்களின் கோரிக்கையை கவனத்தில் ஏற்று இவர்களுக்கான நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *