TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்கள் 2022 – தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி!

TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்கள் 2022 – தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ம் வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி, வரும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

குரூப் 4 தேர்வு

 

தமிழக அரசுத்துறையை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்குமான ஆட்சேர்ப்பு செயல்முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான அனைத்து பதவிகளுக்கும் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டில் திட்டமிட்டபடி TNPSC போட்டித்தேர்வுகள் நடத்தப்படவில்லை

tnpsc group 4 and 2 exams announcement dec 7

tnpsc group 4 and 2 exams announcement dec 7

இந்நிலையில் வழக்கம் போல, 2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) போட்டித்தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணை இன்று (டிச.7) அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கும் சுமார் 5,255 பணியிடங்களுக்கு 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குரூப் 4 பணிக்கான சிறப்பு என்னவென்றால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சொந்த மாவட்டத்திற்குள்ளே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

 

இப்போது குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் இத்தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை தெரிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதவிகள்:
  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)
கல்வித்தகுதி:
  • குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
  • கூடுதலாக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்,
  • அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
  • பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரையும், பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரையும் சலுகை கொடுக்கப்படுகிறது.
  • தவிர மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
  • எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்ட இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் கேட்கப்படும் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2022 அறிவிப்பு – புதிய விதிமுறைகள் வெளியீடு!

  • தேர்வுக்கான அனைத்து வினாக்களும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும்.
பாடத்திட்டம்:
  • மொழி பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • தொடர்ந்து 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும்.
  • பொது அறிவு பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பணி முறை:

இந்த எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
பிறகு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *