tnpsc group 4 new update 2023

TNPSC Group 4 தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது? தெரிந்து கொள்ளுங்கள்!

tnpsc group 4 new update 2023

tnpsc group 4 new update 2023

TNPSC Group 4 தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது? தெரிந்து கொள்ளுங்கள்!
சமீபத்தில், குரூப் 4 நிலை காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடத்தியது. இந்த எழுத்துத் தேர்வின் மூலம் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 3,139 இடங்கள், தமிழகத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர்/சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Typist/steno Typist) பதவிகளாகும். எனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போன்று அரசு வேலைகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வெறும் பாடப் புத்தகங்களோடு நின்று விடாமல், தட்டச்சர்/சுருக்கெழுத்தார் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். இது, உங்கள் வெற்றி வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கும்.

குரூப் 4 தட்டச்சர் ]அடிப்படைத் தகுதிகள்:

தட்டச்சர் பதவிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியும், அரசு தொழில்நுட்ப தட்டச்சுத் தேர்வில் கீழ்க்கண்டவற்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை – Higher / Senior Grade in Tamil and English

(அ) tnpsc group 4 new update 2023

தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை – Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English

(அ) tnpsc group 4 new update 2023

ஆங்கிலத்தில் முதல்நிலை மற்றும் தமிழில் இளநிலை – Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil

குரூப் 4 சுருக்கெழுத்தர்/தட்டச்சர் அடிப்படைத் தகுதிகள்:

அதேபோன்று, சுருக்கெழுத்தர்/தட்டச்சர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் இரண்டிலும் (both in Typewriting and in Shorthand) கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை – Higher / Senior Grade in Tamil and English

(அ)

தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை – Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English

(அ)

ஆங்கிலத்தில் முதல்நிலை மற்றும் தமிழில் இளநிலை – Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.

தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (Directorate of Technical Education), ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அரசு தட்டச்சு/சுருக்கெழுத்தர் – (பிப்ரவரி/ஆகஸ்ட் ) கணினி திறன் தேர்வை (ஜூன்/டிசம்பர்) நடத்தி சான்றிதழ் வழங்குகிறது.

தட்டச்சர்/சுருக்கெழுத்தர் தேர்வுக்கு நீங்கள் உங்கள் அருகில் உள்ள தட்டச்சுப் பயிலகங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வை எழுதலாம். இல்லை, நீங்கள் தனித்தேர்வராகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பாகும்.

அதேபோன்று, அரசு கணினி சான்றிதழ் தேர்வு எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சில் இளநிலை தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் 044 – 22350525,22351018, 22350618,22351423,22351015,22350520 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

எப்படியாவது அரசுத் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி திறன் ஆகியவற்றிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். மத்திய அரசானாலும் சரி/ மாநில அரசுகளானாலும் சரி/ இந்திய உச்ச நீதிமன்றமானாலும் சரி/மாவட்ட நீதிமன்றங்களானாலும் சரி தட்டச்சர் (Type-writer)/சுருக்கெழுத்தர் (Short hand) இல்லாமல் இயங்க முடியாது. எனவே, அரசு வேலைகளுக்கும் அல்லும்/பகலும் உழைக்கும் தேர்வர்கள் தட்டச்சர் சான்றிதழ் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு தட்டச்சர் – கணினி பள்ளிகள் சங்கத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *