TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. குறைக்கப்பட்ட பணியிடங்கள் – முடிவுகள் வெளியாவதும் தாமதம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வை தமிழகத்தின் பல தேர்வு மையங்களில் நடத்தியது. இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
TNPSC குரூப் 4 முடிவுகள்:
ஒவ்வொரு வருடமும் TNPSC ஆல் தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2 வருடங்கள் கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்ததால் எந்த தேர்வுகளும் TNPSC ஆல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தான் தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த குரூப் 4 நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த்தனர். ஆனால் 15 லட்சம் பேர்தான் தேர்வை எழுதியிருந்தனர். தற்போது வரை முடிவுகள் வெளியாகாததால் எப்பொழுது முடிவுகள் வரும் என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது பிப்ரவரி 2023ல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் 2500 பணியிடங்கள் குரூப் 4 தேர்விற்கு சேர்க்கப்பட்டு மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9800க்கும் மேல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் முன்பு அறிவிக்கப்பட்ட 7301 பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.