2023ல் வரவுள்ள டாப் 5 வேலைவாய்ப்பு அறிவிப்புகள்.. 1,30,000+ பணியிடங்கள் – TNPSC, SSC, IBPS, RRB!
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மத்திய, மாநில துறைகளில் இருக்கும் காலிப்பாணியிடங்கள் TNPSC, SSC, IBPS, RRB வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த வருடம் SSC CGL அறிவிப்பின் கீழ் 20,000 பணியிடங்கள், CHSL அறிவிப்பில் 4500+ பணியிடங்கள், MTS அறிவிப்பில் 7300 பணியிடங்கள், CPO அறிவிப்பில் 4600+ பணியிடங்கள் என மொத்தம் 36 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் TNPSCயின் குரூப் 2 அறிவிப்பின் கீழ் 5529 பணியிடங்கள் குரூப் 4 அறிவிப்பின் கீழ் 7000 பணியிடங்கள் என 12 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதை தொடர்ந்து IBPS PO, Clerk அறிவிப்பின் கீழ் கிட்டத்தட்ட 15000 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த வருடம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே துறையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டில் NTPC அறிவிப்பு 35000+ காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது.
கொரோனா காலமாக TNPSC உள்ளிட்ட தேர்வாணையங்கள் 2 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு போட்டி தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பி வருகின்றன. எனவே அடுத்த வருடம் இந்த காலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை கீழ் குறிப்பிட்டவாறு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- TNPSC – 30,000+
- SSC – 35000+
- Railway – 40,000+
- IBPS – 25000+
என மொத்தமாக அடுத்த வருடம் 1,30,000+ காலிப்பணியிடங்களுக்கும் மேல் நிரப்ப அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி தேர்வர்கள் தங்களை நன்கு வரப்போகும் தேர்வுகளுக்கு தயார்செய்து கொள்ளும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.