இதுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்.. வங்கி கணக்கில் பொங்கல் பரிசு பணம் – வெளியான அதிரடி உத்தரவு!

18-lakh-people-aadhar-number-not-joining-ration-cards

18-lakh-people-aadhar-number-not-joining-ration-cards

இதுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்.. வங்கி கணக்கில் பொங்கல் பரிசு பணம் – வெளியான அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இப்பணியை விரைவுபடுத்த அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு

தமிழகத்தில் வர இருக்கும் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பரிசாக வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மக்களின் கை விரல் ரேகை மூலமாக உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் தற்போது வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாக முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் பட்டியல் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படும். இவர்களிடம் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்க படிவம் ஒன்றை வழங்க வேண்டும். இந்த படிவத்தை பூர்த்தி செய்த பின்பு ரேஷன் ஊழியர்களிடம் ரேஷன் அட்டைதாரர்கள் சமர்பிக்க வேண்டும். இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும். மேலும் இந்த வருடம் பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிட்டுள்ளனர்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *