தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28-10-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம உதவியாளர் வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் சம்பளம்:
கிராம உதவியாளர் – ரூ.11,100 – 35,100/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.