தமிழகத்தில் மின்சாரதுறையில் உள்ள 56,000 காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மின்சாரதுறையில் உள்ள 56,000 காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.ω

காலிபணியிடங்கள் :

திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் மின்சரா துறையில் பல மாற்றங்களை புகுத்தி வருகிறது. கடந்த மாதங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கில் போது அரசு இந்த கட்டணம் செலுத்த சலுகைகளையும் கால அவகாசத்தையும் வழங்கியது. மேலும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த படி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

மின் நுகர்வோரின் புகார்களை தொலைபேசி வாயிலாக பெறுவதற்கு கடந்த ஜூன் மாதம் மின்னகம் எனும் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது. இந்த மின்னகம் திறக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், தமிழகத்தின் 3 கோடியே 16 லட்சம் மின் நுகர்வோருக்கும் பயன்படும் விதமாக மின்னகம் தொடங்கப்பட்டதுதமிழகம் முழுவதும் மின்வாரியப் பணிகளை ஓரிடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த மின் புகார் மையம் மூலம் 99% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் 56, 000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அவசரமாக நிரப்ப வேண்டிய காலிப்பணியிடங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அரசின் நிதி நிலைக்கு ஏற்ப அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *