தமிழக அஞ்சல் துறையில் வேலை.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – நவம்பர் 18 நேர்முகத்தேர்வு!

கோவை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்தில் காலியாக இருக்கும் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தமிழக அஞ்சல் துறையில் வேலை

தமிழக அஞ்சல் துறையில் வேலை

முகவர் பணி

  1. தமிழகத்தில் அஞ்சல் அலுவலக துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் புதிய ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக கோவை அஞ்சல் கோட்டகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கோவை அஞ்சலக அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு சேவையில் நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வரும் நவம்பர் 18ம் தேதியன்று நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.
கல்வித்தகுதி:
  • 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய அரசாணை ரத்து? ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

  • மேலும் 65 வயதுக்குட்பட்ட மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள், அதிகாரிகளும் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் இடம்:

நேர்முகத் தேர்வு கூட்ஸ் ஷெட் ரோடு, கோவை தலைமை அஞ்சல் நிலையம், கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

சான்றிதழ் சமர்ப்பிப்பு:
  • இந்த பணிக்கான விண்ணப்பங்களை அஞ்சல் நிலையங்கள் அல்லது  docoimbatore.tn@indiapost.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

  • தேர்வுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பம், சான்றிதழ்களுடன் நவ.18ம் தேதி காலை 10.00 மணியளவில் கோவை தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வருகை தர வேண்டும்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 0422 2558 541 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் அளித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *