தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!
தமிழகத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து தொடர் வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தமாக 1250 சிறப்பு பேருந்துகள் இயங்கப்பட இருப்பதாக என போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 350 சிறப்பு பேருந்துகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பெங்களூரில் இருந்து சென்னை கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்கள் என்பதால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்வது நிம்மதி அளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.