Category: news

if-the-water-level-of-mettur-dam-has-decreased-so-much-what-is-the-reason-read-it-now 0

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இவ்வளவு குறைஞ்சிடிச்சா… என்ன காரணம்?

சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேட்டூர் அணையைப்பற்றி  நாம் அறிந்திருக்கிறோம் ….! ஏனென்றால்  இந்த அணையின் மூலம்  தமிழ்நாட்டில்  உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம்  போன்ற 12 மாவட்டங்கள்  பாசன வசதியை பெறுகின்றன. இந்நிலையில், இந்த மேட்டூர் அணையில்யிருந்து குருவை பாசனத்திற்காக   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர்   திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் காவிரியிலிருந்து கடந்த 12 ஆம் தேதி  குருவை சாகுபடி செய்ய சுமார் 12 ஆயிரம் கண அடி வீதம் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தினால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்  திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின்...

allow-these-four-days-to-go-to-chaturagiri-hill-devotees-this-announcement-is-for-you-read-now 0

சதுரகிரி மலைக்கு செல்ல இந்த நான்கு நாட்களுக்கு அனுமதி..! பக்தர்களே இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம்  கோவில் ஆனது விறுதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரி கோவிலில்  ஆடி அமாவாசை  முன்னிட்டு   6 நாட்களுக்கு  பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  6 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர,சந்தன மகாலிங்கம்  கோவில்   திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோவிலில் இருக்கும் நீரோடை பகுதிகலில் பக்கதர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடி அம்மாவாசை முன்னிட்டு  வழக்கம் போல் வரும்...

0

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் தேதியில் திடீர் மாற்றம்..! என்ன காரணம்?

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி இருக்கும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் நவராத்திரி என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையே...

0

இனிமே டிரைவரே இல்லாமல் கார் ஓட்டலாம்..! ஆட்டோமேட்டிக் காரின் வீடியோ வைரல்!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்களை தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு வாகனங்கள் மக்களோடு ஒன்றியதாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தில் சொந்த வீடு இருக்கோ இல்லையோ சொந்த கார் அல்லது பைக் வைத்துள்ளனர். இந்நிலையில், வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது வாகனங்களில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், டெஸ்லா நிறுவனம் ஓட்டுநர்கள் இல்லா வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான கடைசி கட்ட பணிகளும் நிறைவடைந்து அதற்கான டெஸ்ட்டும் நடத்தப்பட்டது. இந்நிறுவனம் பெங்களூரில் இந்த டெஸ்டை நடத்தியது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில்...

are-you-eligible-for-rs-1000-entitlement-can-see-your-mobile-phone-see-here 0

ரூ.1000 உரிமைத்தொகை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையான்னு? இனி உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மகளிர் பெற அலைய தேவையில்லை. நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று அதனை வழங்கி வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கும் அந்தந்த ஊரிலேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு...

are-you-paying-extra-for-cylinder-delivery-this-important-news-is-for-you-dont-miss 0

நீங்களும் சிலிண்டர் டெலிவரி பண்றவங்களுக்கு கூடுதலா காசு கொடுக்கிறீங்களா? அப்போ இந்த முக்கிய செய்தி உங்களுக்குத்தான்!!

முன்னதாக விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்பொழுது உள்ள அவசர காலகட்டத்தில் விறகு அடுப்பில் சமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு கொடுப்பது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இல்லத்தரசிகளின் இத்தகைய சிரமத்தை போக்க கேஸ் சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கேஸ் சிலிண்டரிலிருந்து வெளியாகும் கேஸிலிருந்து நெருப்பை உருவாக்கி அதன் மூலம் சுலபமாக சமையல் செய்ய முடியும். இந்நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கேஸ் சிலிண்டர்கள் தீந்து விட்டால் அதனை புக் செய்து பெறலாம். இதுபோன்று புக் செய்து பெறப்படும் சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், சிலிண்டரை டெலிவரி...

0

இனிமே ஹார்ட் எமோஜி (Heart Emoji) அனுப்பாதீங்க… ஜெயிலுக்கு போய்டுவீங்க… உடனே படிங்க அரசின் வினோதமான அறிவிப்பு!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய எண்ணங்களை EMOJIகளாக அனுப்புகிறார்கள். ஒவ்வொரு EMOJIக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. இதை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்! இதில் அனைவரும் விரும்பும் முக்கியமான EMOJI என்றால் HEART EMOJI தான். இந்த ஹார்ட் EMOJIகளை பயன்டுத்த கூடாது என்று அறிவித்துள்ளது அரசு! தற்போது, வினோத அறிவிப்பு ஒன்றை குவைத் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தான் இனையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அறிவிப்பு என்ன என்றால், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு “HEART EMOJI”களை அனுப்பினால் சிறைத் தண்டனை அளிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதிலும், முதல் முறை தவறு செய்தால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் உண்டு. மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 5...

0

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் இன்னும் நீங்க வாங்கலையா? அப்ப உடனே போய் வாங்கிகோங்க… தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகளை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இந்த பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்த நிலையில் இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. மகளிர் உரிமைத்தொகைக்கான முதற்கட்ட பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திட்டத்திற்கான சிறப்பு முகாம்களும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பனியின் போது விண்ணப்பம் வழங்க தவறியவர்களுக்கு விண்ணப்பம் வழங்க இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே,...

0

அடேங்கப்பா… 27 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 தராங்களாம்..! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

தமிழகத்தில் பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், உருவாக்கப்பட்ட திட்டம்தான் “புதுமைப்பெண் திட்டம்”. இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட “புதுமைப்பெண் திட்டத்தை” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நடப்பு ஆண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவு பெற்ற நிலையில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 416 இடங்கள் நிரம்பி உள்ளது. இந்நிலையில், அரசு கலை...

0

இனிமே ஆசிரியர் பணியிடங்களுக்கு TET தேர்வு கட்டாயமில்லை..! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் TET தேர்வின் மூலமாக தான் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், இந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கட்டாயமாக போட்டித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கிடையில், ஆசிரியர் பணிக்கு இனி TET தகுதி தேர்வு தேவை இல்லை என அசாம் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த TET தேர்வுக்கு பதிலாக, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி...