மக்களே உஷாரா இருங்க… தமிழகத்தில் மீண்டும் வாட்டி வதக்கப்போகும் வெயில்..! வானிலை மையத்தின் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் வருடந்தோறும் மே மாதத்தில் தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், தற்பொழுது உள்ள காலநிலை மாற்றத்தால் ஏப்ரல் மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. தமிழகத்தில் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் கூற்றுப்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில்...