இனிமே ஆசிரியர் பணியிடங்களுக்கு TET தேர்வு கட்டாயமில்லை..! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் TET தேர்வின் மூலமாக தான் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், இந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கட்டாயமாக போட்டித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கிடையில், ஆசிரியர் பணிக்கு இனி TET தகுதி தேர்வு தேவை இல்லை என அசாம் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த TET தேர்வுக்கு பதிலாக, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி...