தமிழக அரசு பள்ளி மாணவர்களே சீக்கிரம் ரெடியாகுங்க… உங்களுக்கும் மாதம் ரூ.1000 தராங்களாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அரசு பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில், இந்த திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து இளநிலை படிப்பினை தொடரும் வரைக்கும்...