தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
holidays-soon-announced-again-for-1st-to-12th-class-students-in-tamil-nadu

holidays-soon-announced-again-for-1st-to-12th-class-students-in-tamil-nadu

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்க கல்வித்துறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு:

இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 3 து அலை தொடங்கியுள்ளது என்பது அறியப்படுகிறது. இதையடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN

 

ஓமைக்ரான் பரவல் தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு ஜனவரி 3 ஆம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு திடீர் முடிவு எடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜனவரி 30 ஆம் தேதி அறிவித்தது. அதேபோல் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு, ஆதார் இணைப்பு அவசியம் – பிப். 28ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளன. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு மேல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பிலும் கூறப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *