குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் ரேசன்கடையில் கைரேகையை பதியவேண்டும்! முழு விவரம்
குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் கூறி வருகின்றார்கள் நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதாவது, அட்டையில் பெயா் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது....