செப்., 7 சந்திர கிரகணம்; எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு துரதிர்ஷ்டம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
தனி ஒரு நபரின் ஜாதகத்தில் குடும்ப உறவுகள், மன அமைதிக்கான வழிகள், நற்பெயர் மற்றும் பிற உணர்வுப்பூர்வமான விஷயங்களை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக சந்திரன் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 7 அன்று நிகழும் சந்திர கிரகணம், அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வரும், அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேஷம் – நிதி நிலை மேம்படும்! எதிர்வரும் சந்திர கிரகணம் மேஷ ராசியினரின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஆனது, உங்கள் நிதி நிலையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும். அதாவது, வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், ஆசைகள் நிறைவேறும். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற நிதி ஒரு தடையாக இருக்காது. புது...