ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
சிறப்பு முகாம்:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து கிட்டத்தட்ட 1.52 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தவறியவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரையிலும் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த எந்த குடும்ப தலைவிகளும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு குடும்ப தலைவிகளின் மொபைல் எண்ணிற்கே நேரடியாக விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்தான செய்தி அனுப்பப்படும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யவும் பொது மக்களுக்கு உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.