தமிழக பெண்களுக்கு புத்தாண்டு பரிசு.. ரூ.1000 உரிமைத்தொகை – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 நிதியுதவி, 2023 ஆம் ஆண்டு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய முழு விவரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
தேர்தல் வாக்குறுதி: tamil-nadu-govt-new-year-gift-rs-1000-for-womens-new-update
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இதுவரை திமுக சார்பில் இருந்து பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை குறித்த எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அதனால் பல தரப்பில் இருந்து எப்போது இந்த உதவித்தொகை வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஏழை மக்களின் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதால், அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை துவங்கி இருக்கிறார்.
மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின் போது முதல்வர் வாக்குறுதி அளித்து இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது. அதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கொடுக்க வேண்டியதுள்ளது. அதன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாயை உடனடியாக வழங்க முடியவில்லை.தற்போது நிதி நெருக்கடி சீர் செய்யப்பட்டு வருவதால் 2023 ஆம் ஆண்டு பெண்களுக்கான உரிமை தொகை கட்டாயம் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்து இருக்கிறார்.