தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தின் அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்‌தின்‌ மலைப்பகுதிகள்‌, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, இருச்சிராப்பள்ளி, கரூர்‌, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *