தமிழக அரசில் 2553 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்யும் வழிமுறைகள் உள்ளே – TN MRB Assistant Surgeon Job Apply 2024

தமிழக அரசில் 2553 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்யும் வழிமுறைகள் உள்ளே – TN MRB Assistant Surgeon Job Apply 2024

TN MRB Assistant Surgeon Job Apply 2024

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ( TN MRB) தமிழ்நாடு அரசாங்கத்தால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையில் 02.01.2012 தேதியன்று பல்வேறு வகை ஊழியர்களுக்கு நியமனம் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களின் தன்மை, முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

TN MRB Assistant Surgeon Job Apply 2024
TN MRB Assistant Surgeon Job Apply 2024

தமிழக மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் Assistant Surgeon பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்  TN MRB அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 2553 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செயலில் உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 24.04.2024 தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon (General) மொத்தம் 2553 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு விவரம் :

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு 01.07.2024ஆம் தேதிப்படி  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம்: 

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கு  ரூபாய் 56100 முதல் ரூபாய் 177500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  

கல்வித் தகுதி: 

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Madras Medical Registration Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 12 மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கு பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000 ஆகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 500 ஆகவும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு:

தமிழக மருத்துவ வாரிய உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf    என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2024 ஆகும்.

TN MRB Assistant Surgeon Job Apply 2024
TN MRB Assistant Surgeon Job Apply 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *