தமிழக அரசு துறையில் கணினி வல்லுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! ரூபாய் 30000 மாத சம்பளம் – TNHRCE Various Job Apply 2024

தமிழக அரசு துறையில் கணினி வல்லுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! ரூபாய் 30000 மாத சம்பளம் – TNHRCE Various Job Apply 2024

TNHRCE Various Job Apply 2024

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் பக்தி நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கும், மூலிகை சுவரோவியங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கும் தேவையான துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNHRCE Various Job Apply 2024
TNHRCE Various Job Apply 2024

இந்தப் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.

துணை ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: எம்.ஏ தமிழ்/ இதழியல்/ தொல்லியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: 45,000

சுவடியியல் வல்லுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும், ஓலைச்சுவடி பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நூலகப் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 40,000.

கணினி வல்லுநர் (வடிவமைப்பு):

காலியிடங்களின் எண்ணிக்கை: 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ ஓர் ஆண்டு சுவடியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP, Indesign, Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 30,000.

தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்):

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம்/ ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல், ஓர் ஆண்டு சுவடியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 25,000.

தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர்:

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: தொல்லியல் / மரபு ஓவியங்களில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 40,000. மரபு ஓவிய புனரமைப்பாளர். காலியிடங்களின் எண்ணிக்கை: 1.

கல்வித் தகுதி:

முதுகலை நுண்கலை பட்டப்படிப்பு. காட்சியக படிப்பு/ புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 35,000

ஆய்வுக் கூட உதவியாளர்:

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 20,000.

ஆய்வுக் கூடத்தில் சுத்தம் செய்யும் உதவியாளர்:

காலியிடங்களின் எண்ணிக்கை: 1. கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 15,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், தங்கள் சுயவிவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி:

தபால் பெட்டி எண்: 3304, தபால் அலுவலர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை – 34.

TNHRCE Various Job Apply 2024
TNHRCE Various Job Apply 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *