பொங்கல் பரிசு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000… தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்!! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட...