ரேஷன் கார்டுதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 2500 பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரெடியா?
ரேஷன் கார்டுதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரெடியா? பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரொக்கப்பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்புடன், ரூ2500 ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை அரசு தற்போது வரையிலும் வெளியிடவில்லை. அதாவது, தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளின் வாயிலாக ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால், தான் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை...