2025ம் ஆண்டின் கிரகண நாட்கள் : முதல் கிரகணம் எப்போது நிகழ போகிறது தெரியுமா?
2025ம் ஆண்டில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போது நிகழ உள்ளன? மொத்தம் எத்தனை கிரகணங்கள், எந்தெந்த மாதங்களில் நிகழ உள்ளன என்பதை தெரிந்து கொண்டு, அந்த நாட்களில் கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் திட்டங்களை மாற்றி அமைக்கலாம். கிரகணங்கள் : கிரகணம் என்பது இயற்கையாக நிகழும் வானியல் நிகழ்வு தான் என்றாலும் இது மனிதர்களின் வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக சூரியன் அல்லது சந்திரனின் நிழல் பூமியின் மீது படும் போது ஏற்படும் நிகழ்வை கிரகணம் என்கிறோம். வருடத்திற்கு 4 அல்லது 5 கிரகணங்கள் ஏற்படும். முழு கிரகணம், பகுதி கிரகணம் என இரண்டு வகையாக கிரகணங்கள் சொல்லப்படுகின்றன. 2025ம் ஆண்டில் எத்தனை கிரகண நாட்கள், எந்ததெந்த மாதங்களில் வருகிறது, முதல் கிரகணம்...