பெண்களே மாதம் ரூ.1000 வாங்க நீங்களும் விண்ணபிச்சிட்டீங்களா..? உங்க விண்ணப்பத்தை சரிபார்க்க வீடுகளுக்கே வரும் அதிகாரிகள்!! உஷாரா இருந்துகோங்க…
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான விண்ணபங்களை வழங்கும் சிறப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் மூலம் இதுவரை சுமார் 1.63 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணபங்கள் நாளை(ஆகஸ்ட் 24) முதல் சரிபார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்க்கும் பணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை அல்லது...