அட்ராசக்க… செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!
பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு முடிந்தப்பின் விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வானது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....