இனி யாருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடையாது..! தமிழக அரசின் புதிய உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உரிமைத்தொகை வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உரிமைத்தொகை வழங்க வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முகாமிற்கு வந்து கொடுக்கும் தேதி, நேரம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த டோக்கன் வழங்கும் பணிகள் ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதையடுத்து, இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கும் அல்லது...