50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம் திருப்பூர் மாவட்டத்தில், 2024-25ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் (ரூ.1,56,875/-)வழங்கும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விவரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875/- மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4...