சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: நாய்களை வளர்க்க பிரியப்படுபவர்கள் முறையான அனுமதியை பெற வேண்டும், இல்லாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள். சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவ அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் இன்னமும் மீளவில்லை.. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கியது.. இப்போது, சிறுமிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய போகிறார்கள்.. சிறுவர்கள்: இதேபோல, மேலும், 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர். பரங்கிமலையில் 11 வயது அஸ்வந்த் என்ற சிறுவனை விரட்டி விரட்டி நாய் கடித்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த நாயை விரட்டி விட்டனர். இப்போது காயமடைந்த சிறுவனை மீட்டு அருகில்...