ரெடி கவுன்டவுன் ஸ்டார்ட் பண்ணலாமா..? விண்ணில் பாய தயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம்..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை கடந்த நிலவை சென்றடைந்து தற்பொழுது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. இந்த ஆதித்யா எல் 1 விண்கலமானது செப்டம்பர் 2(நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது. இது...